News & Events

Potluck Lunch - 2015

Food in our own tradition is something holy. It's not about nutrients and calories. It's about sharing. It's about honesty. It's about identity. Pot luck lunch held in our school on 31.3.15. We had students gathered starting from first standard they sat with their friends and had lunch. There was jubilance in the atmosphere. Sharing always spreads joy and it’s true even with food. It brings unity among all and brought the feeling of oneness in everyone’s hearts.

பகிர்ந்து உண்ணும் பந்தி

ஒற்றுமையையும், பண்பையும் வளர்க்கும் விதமாக பீளமேடு நேஷனல் மாடல் பள்ளியில் பகிர்ந்து உண்ணும் பந்தி 31.03.2015 அன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வின் வாயிலாக மாணவர்கள் “அனைவரும் ஒன்றே” என்ற கொள்கையை தெளிவாக அறிந்து கொண்டனர்.

மாணவர்களிடையே பகிர்ந்துண்ணும் பழக்கத்தை நடைமுறைப்படுத்தவும், மற்றவர்களுக்கு கொடுத்து உதவும் பண்பை ஊக்குவிப்பதற்காகவும், ஒற்றுமை உணர்வை மேம்படுத்தவும் பள்ளி நிர்வாகம் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்தது.

நேசனல் மாடல் பள்ளியில் இரு பெரும் விழா கொண்டாட்டம்

மார்ச் 20. கோவை நேசனல்மாடல் சி பி எஸ் இ பள்ளியில் உலக கவிஞர்களை சிறப்பிக்கும் விதமாக உலககவிதைகள் தினம் மற்றும், மாணவர்களின் தமிழ் திறனை மேம்படுத்தும் விதமாக தமிழ் இலக்கிய மன்றம் என்றஇரு பெரும் விழா கொண்டாடப்பட்டது.

பள்ளிச் செயலர் திருமதி உமா மோகன் அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கினார்.

பள்ளி முதல்வர் திருமதி கீதா லக்ஷ்மண் அவர்களின் முன்னிலையில் மதியம் 12.30 மணிக்கு விழாதொடங்கியது.

மார்ச் 21 உலக கவிதை தினத்தைக் கொண்டாடும் விதமாக மாணவ மாணவிகள் தமது கவிதைகளை அனைவர்முன்னிலையிலும் அரங்கேற்றினர்.

இனிதாக நடைபெற்ற தமிழ் இலக்கிய மன்றத்தில் பாடல், நடனம், நாடகம் என பல கலை நிகழ்ச்சிகளும் தமிழ்ப்பண்பாட்டை வெளிப்படுத்தும் பறையாட்டம், ஒயிலாட்டம்,காவடியாட்டம் போன்ற நடனங்களும் இடம்பெற்றன.

இறுதியாக நன்றியுரையுடன் 2.30 மணியளவில் விழா இனிதாக நிறைவுற்றது.

Virtual Tour

Quick Information

admission

© 2015 - National Model Senior Secondary School

Powered by Fibroin.in